அடிப்படை உரிமை கூட தமிழகத்தில் மறுக்கப் படுகிறது: கவர்னர் ரவி கூறுவது என்ன?

என்ன படிக்க வேண்டும் என்று அடிப்படை உரிமை கூட தமிழகத்தில் மறுக்கப்படுவதாக கவர்னர் ரவி கூறியுள்ளார். திருநெல்வேலியில் நடந்த ஐயா வைகுண்டர் நிகழ்ச்சியில் கவர்னர் ரவி கலந்துகொண்டு பேசினார், தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை. என்ன படிக்க வேண்டும் என்று அடிப்படை உரிமையை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
இங்குள்ள ஆட்சியாளர்கள் மொழி திணிப்பு என்று பொய்யான பிம்பத்தை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் எவ்வளவு போராடினாலும் எந்த அந்நிய சக்தியாலும் மாணவர்களுக்கும் கொண்டுவந்துள்ள மும்மொழிக் கொள்கையை கண்டிப்பாக தமிழகத்தில் அமல்படுத்த உள்ளோம்.
ஒருவர் எந்த மொழியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்பதை அந்த மாணவர்களையும் பெற்றோர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதை தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் தங்களின் அரசியல் நலனுக்காக தேவையற்ற வெறுப்பையும், காழ்ப்புணர்ச்சியையும் மாணவர்கள் மனதில் விதைக்க நினைக்கின்றனர். இது அவர்களின் பகல் கனவு, ஒருபோதும் நிறைவேறாது. ஐயா வைகுண்டரின் சனாதன சிந்தனைகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும், இவ்வாறு கவர்னர் ரவி கூறினார்