முதல்வர் நிர்வாக சீர்கேட்டை மறைக்க முயற்சி: அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டு!

By : Bharathi Latha
தமிழகத்தில் தனது நிர்வாக சீர்கேட்டை மறைக்கத்தான் முதல்வர் ஸ்டாலின் ஹிந்தி திணிப்பு என்ற பலகையை கையில் எடுத்துள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அண்மைக் காலமாக தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கை குறித்து திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே மோதல் இருந்து வருகிறது.திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது : வட மாநிலங்களில் டி,பானிபூரி வாங்கவும் கழிப்பறையை பயன்படுத்தவும் ஹந்தி கற்றுக் கொள்வது அவசியம். செயற்கை நுண்ணறிவு காலத்தில் பள்ளிகளில் முன்மொழிக் கொள்கை அவசியமில்லை.
நவீன மொழிபெயர்ப்பு கருவிகள் மொழி பிரச்சனையை அகற்றி விட்டன. கூடுதல் மொழி என்று சுமையை மாணவர்கள் மீது ஏற்றாதீர்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற ஆங்கிலம் கட்டாயம் தேவை வேறு எந்த மொழியையும் விருப்பப்பட்டால் கற்றுக்கொள்ளலாம் அதில் கூறி இருந்தார்.
இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருப்பது தமிழகத்தில் நிலவும் நிர்வாக சீர்கேட்டை மறைக்கத்தான் ஹிந்தி திணிப்பு என்ற பலகையை அழிக்க பெயிண்ட் டப்பாவுடன் சிலர் சுற்றித் திரிகின்றனர். மாநிலத்தில் இரண்டு வேறு விதிகள் உள்ளன தனியார் பள்ளி மாணவர்கள் மூன்று மொழியை படிக்கலாம் அதையே அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க மறுப்பது ஏன் என அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் திமுக பொதுச்செயலாளர் துறைமுருகன் கூட்டம் ஒன்றில் பேசிய வீடியோவை முதல்வர் கண்டிப்பாக பார்க்க வேண்டும். பார்லிமென்டிற்கு போக இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகள் பேச தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம் என அவர் கூறியிருப்பதை முதல்வர் ஏற்றுக்கொள்ள வேண்டும், இவ்வாறு துரைமுருகன் பேசியதை குறித்தும் அண்ணாமலை விவரித்துள்ளார்.
