தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு இடையே வரும் சிக்கல்: ஹிந்தி எதிர்ப்பால் நடக்கிறதா?

புதிய கல்விக் கொள்கையை உள்ளடக்கிய பி.எம்.ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், அதற்கான நிதியை வழங்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டி இருந்தால்,ஹிந்தி திணிப்புக்கு வழிவகுக்கும் என காரணம் கூறி திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மும்மொழிகளில் கொள்கையில் கட்டாயப்படுத்தக் கூடாது, என அதிமுக , பாமக போன்ற எதிர்க்கட்சிகளும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஹிந்தி எதிர்ப்பு அரசியலை மீண்டும் திமுக கையில் எடுத்துள்ளது. ஹிந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்ப்போம். தமிழ் மொழியை காப்போம் என தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தினமும் கடிதம் எழுதி வருகிறார்.ரயில் நிலையங்கள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களின் பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை திமுகவினர் அழித்து வருகின்றனர். சமூகத்தில் இவ்வாறு பிளவை ஏற்படுத்தும் முயற்சியை திமுக அரசு முன்வைக்கிறது. திமுகவின் மோசமான ஆட்சி நிர்வாகத்தை இனிமேல் மறைக்க முடியாது.
முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் என்ன பதில் கூறப்போகிறார்.தமிழகத்தில் மட்டும் கட்சி நடத்தும் திமுக என்ன வேண்டுமானாலும் பேசலாம் தென் மாநிலங்களில் பாஜகவை பலவீனப்படுத்தலாம். இந்தாண்டு இறுதியில் பீகாரின் சட்டசபைக்கு தேர்தல் நடக்க இருக்கிறது, திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு அரசியல், அம்மாநிலத்தில் ஹிந்தி கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி கட்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறார்கள்.