தி.மு.கவின் தேர்தல் அறிக்கை: சொன்னதை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 14 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்கள் ரூ.12,500 மாத தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிகின்றனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.பகுதிநேர ஆசிரியர் சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில்குமார் கூறும் போது, திமுக தேர்தல் அறிக்கை எண் 153 அரசின் அனைத்து துறைகளிலும் பத்தாண்டுக்கு மேல் தற்காலிகமாக பணிபுரிபவர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின் தேர்தல் வாக்குறுதிகளில் அரசாணை ஆக்க வேண்டும்.
ஆனால் தேர்தலுக்கு முன் தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள், என்ற நம்பிக்கையை ஆசிரியர்கள் மனதில் ஆழமாக ஏற்படுத்தினார். 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கையை அளித்து இதுவரை எந்த ஒரு அரசாணை வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.
வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும் இந்த வாய்ப்பை தவறவிட்டால் அடுத்த அன்று தேர்தல் வந்துவிடும்.இதனால் திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. தேர்தல் அறிக்கையை இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது மக்களிடையே ஏமாற்றம் அளிக்கிறது.