தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையால் பொதுமக்களுக்கு இழப்பே!டாஸ்மார்க் நிறுவனத்திற்கு தான் லாபம்-அண்ணாமலை!

2025 மார்ச் 4 இல் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் இணைந்து நடத்திய கள் விருந்து கருத்தரங்கு நடைபெற்றது இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இவ்விருந்து குறித்தும் கள் விற்பனை பற்றியும் அண்ணாமலை தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களின் மக்கள்தொகை 5.8 கோடி இன்று தமிழகத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சம் பேர் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது தமிழகத்தில் தனியார் மதுக்கடைகள் இருந்தபோது கூட இத்தனை பேர் மதுவுக்கு அடிமையாக இல்லை இன்று அரசாங்கமே மது விற்பனை செய்கிறது மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் உடல் நலக்குறைவு வேலைவாய்ப்பு இழப்பு என இதனால் தமிழகத்துக்கு ஏற்படும் உற்பத்தித் திறன் இழப்பு ஆண்டுக்கு ரூபாய் 87,000 கோடியாக இருக்கிறது தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையால் பொதுமக்களுக்கு இழப்பே தவிர சாராய ஆலைகள் நடத்துபவர்களுக்கும் டாஸ்மாக் நிறுவனத்துக்கும் மட்டும்தான் லாபம் கிடைக்கிறது
கள் விற்பனை இருந்த காலத்தில் பொதுமக்கள் இத்தனை பேர் மதுவால் உடல் நலம் பாதிக்கப்படவில்லை ஆனால் இன்று கோடிக்கணக்கானவர்கள் மதுவுக்கு அடிமையாகியிருக்கிறார்கள் செயற்கை வேதிப் பொருள்களால் தயாரிக்கப்படும் மது பொதுமக்களுக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது இதனைத் தடுக்கவும் மதுவுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கவும் மீண்டும் இயற்கையான கள் விற்பனைக்கு அனுமதி கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்