ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள் நியமிப்பது அநீதி: பா.ம.க தலைவர் அன்புமணி கண்டனம்!

அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் செவிலியர்கனள நியமிப்பது சமூக அநீதி என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். தமிழக அரசால் புதிதாக திறக்கப்பட்டுள்ள, சென்னை காெளத்தூரில் அரசு மருத்துவமனை ஒன்றில் இன்னும் புதிதாக மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. அங்கு மருத்துவம் அளிப்பதற்காக 35 மருத்துவர்கள், 156 செவிலியர்கள் என மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப் பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மருத்துவமனைகளை உருவாக்கும் தமிழக அரசு அதற்காக பணியமர்த்தப்படும் ஊழியர்களை நிரந்தர வேலையில் அமர்த்த முடியவில்லை. ஏற்கனவே மருத்துவமனையாக உள்ளதை தற்பொழுது புதிய மருத்துவ பிரிவுகளுடன் விரிவுபடுத்தப் பட்டுள்ளது. ஆனால் அதற்கு புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படாமல், மாறாக சிறப்பு மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப் பட்டிருப்பதால் அவர்கள் பணியாற்றிய மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் கருணாநிதி நூற்றாண்டு மருத்துவமனை 2023 திறக்கப்பட்டபோது, புதிய மருத்துவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை சிறப்பு மருத்துவர்கள் தான் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால் அங்குள்ள தலைமை மருத்துவ அதிகாரி தொடர்ந்து 24 மணி நேரமும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார். அவ்வாறு பணி செய்ததால் அவர்களால் முழுமையான திறனை வெளிப்படுத்தும் முடியவில்லை.
புதிய மருத்துவமனைகளை ஏற்படுத்துவது என்பது கட்டிடங்களை கட்டி எந்திரங்களை பொருத்துவது மட்டுமல்ல, மருத்துவமனைக்கு தேவையான மனித வளத்தையும் நோயாளிகளுக்கு தேவையான தகுந்த மருத்துவர்களையும் நியமிப்பதாகும். இவ்வாறு தகுந்த மருத்துவர்களை நியமிக்காவிடில் மக்களுக்கு முறையான மருத்துவ சேவை கிடைக்காது என்பதை தமிழக அரசு உணர வேண்டும். எனவே மருத்துவ பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை தவிர்த்து, அனைத்து மருத்துவமனைகளிலும் நிரந்தர அடிப்படையில் மட்டுமே மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.