தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: ராமதாஸ் புகார்!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தற்போது 52% அதிகரித்துள்ளதாகவும், பெண்கள் வாழ தகுதியற்ற நாடாக தமிழகத்தினை மாற்றி விடக் கூடாது, எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குழந்தைகளின் மேலான குற்றங்களின் எண்ணிக்கை மற்றும் 2024 ஆம் ஆண்டின் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது, குற்றங்களை தடுக்க தமிழக அரசும், போலீசாரும் தவறிவிட்டனர். போக்சோ சட்டம் குறித்து மக்களிடையே தற்போது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் இந்த அளவுக்கு வழக்குகள் பதிவாகின்றன. ஆனால் இதை சாதனையாக பார்க்காமல் தமிழக அரசு பெண்களுக்கு எவ்வளவு கொடுமைகள் தமிழகத்தில் நிகழ்கின்ற என்பதை வேதனையாக பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள் முறைப் படுத்தப்படவில்லை, என்பதை பாமக பல ஆண்டுகளாக கூறி வருகிறது. அதைத்தான் தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை காட்டுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கையை தமிழக அரசு விரைவாக வழங்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவதால் தமிழகம் பெண்கள் வாழ தகுதியற்ற நாடாக மாறிவிடும் நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது, குழந்தைகள் அச்சமின்றி நடமாடும் சூழலை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும், இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.