மொழித்திறன் குறித்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி முன் வைத்த அண்ணாமலை?

மொழித் திறன் குறித்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் 3, 5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களின் தமிழ் கற்றல் திறன் எப்படி இருக்கிறது என்பதை ஏ.எஸ்.இ.ஆர் அறிக்கையை படித்து, தெரிந்து கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மும்மொழி கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வரும் முதல்வர் ஸ்டாலின் கவர்னர் ரவியை விமர்சித்து உள்ளார். தென்னிந்திய மொழிகளை படிக்கும் வாய்ப்பு தமிழக இளைஞர்களுக்கு கிடைப்பதில்லை என்ற கவலை கவர்னர் கொள்ளத் தேவையில்லை என்று விமர்சித்திருக்கிறார். மேலும் வட இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் வட இந்திய மொழிகளை பள்ளிகளில் கற்றுத் தருகின்றனர் என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
முதல்வரின் கருத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறும் போது, புதிய தேசிய கல்விக் கொள்கையானது தனியார் பள்ளிகளின் உயர்தரத்திற்கு கல்வியை அரசு பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதில் நோக்கம். உங்களின் விருப்பத்தை திணிப்பதுதான் சீரற்ற கல்வி கட்டமைப்பாகும். உங்களது அமைச்சர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் மூன்றாவது மொழி அனுமதிக்கும் போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மூன்றாவது மொழியை அனுமதிக்க மறப்பது ஏன் என்பதுதான் எங்களின் ஒரே கேள்வி.
வட இந்திய மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று கூறும் ஸ்டாலின் ஆங்கில புலமை எப்படி இருக்கிறது. மொழித்திறன் குறித்து விமர்சிக்கும் முதல்வர் நமது அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் எப்படி இருக்கிறது? என்பதை ஏ.எஸ்.இ.ஆர் அறிக்கையை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தான் மாணவர்களின் எதிர்காலத்தை சீரழித்து வருகிறார் இவ்வாறு கூறப்படுகிறது.