தமிழ்மொழியை வளர்க்க தமிழக முதல்வர் என்ன செய்தார்? அண்ணாமலை கேள்வி!

தமிழ் மொழியை வளர்க்க முதல்வர் ஸ்டாலின் செய்த சாதனை என்னென்ன? அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ் மொழி மீது பிரதமர் மோடி மதிப்பு வைத்திருக்கிறார் என்றும் மாநில மொழிகளின் வளர்ச்சிக்காக தான் மும்மொழிப் பாடத்திட்டத்தை வலியுறுத்துகிறோம் என்றும் கூறும் பாஜகவினர் ஆட்சியில் தமிழுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கிகின்றனர் சமஸ்கிருதத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்குகின்றனர் எனது குற்றச் சாட்டு.
இதற்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறும் போது, மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் போது தமிழக எல்லையை கடந்து தமிழ் மொழியை வளர்க்க நீங்கள் என்னென்ன சாதனையை செய்திருக்கிறீர்கள்? தமிழ் மொழி தமிழகத்தின் எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதை உங்கள் எண்ணம்.
தமிழின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பிரதமர் மோடி பரப்புவதில் பாதி கூட தாங்கள் செய்யவில்லை. ஹிந்தி ஆசிரியர் பயிற்சி கல்லூரி 1922 ஆம் ஆண்டு ஈரோட்டில் துவங்கப்பட்டது, அப்போது எங்கு சென்றீர்கள். ஹிந்தியை நாடு முழுவதும் பிரபலப்படுத்த முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் முயற்சிகள் மேற்கொள்ளும் போது தாங்கள் என்ன செய்தீர்கள் இவ்வாறு முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சரமாரியாக கேள்வி எழுப்பி வருகிறார்.