தமிழகத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் எதற்கு என ராமதாஸ் கேள்வி?

தமிழகத்தில் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. 2023-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 3,192 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்னும் பணி ஆணை வழங்கப்படவில்லை. கடந்தாண்டு ஜூலையில் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு இன்றுவரை விடைத்தாள்கள் திருத்தப்படவில்லை. இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க தாமதம் ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது இன்று வரை அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் பணிவாய்ப்பு பெறாமல் தவித்து வருகின்றனர்.
ஒன்றை ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் ஒரு ஆசிரியர் கூட தேர்ந்தெடுக்கப் படவில்லை. அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதே ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கடமை. ஆனால் தற்பொழுது அந்த வாரியம் எதற்காக வேலை செய்யாமல் இருக்கிறது அதை மூடிவிடலாம்.அரசு பள்ளிகளின் மீது தமிழக அரசுக்கு அக்கறை வேண்டும். காலி பணியிடங்களுக்கு ஆசிரியர்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.