மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அண்ணாமலை தொடங்கி வைத்த கையெழுத்து இயக்கம்!
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார்.

தமிழக பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சமக்கல்வி எங்கள் உரிமை என்னும் கையெழுத்தை இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் தெலுங்கானா முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா, பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி துணை தலைவர்கள் கருணாகராஜன் நாராயண திருப்பதி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியல் மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் அரசியல் கட்சிகள் இன்று பழைய பஞ்சாங்கத்தையே பாடி வருகிறார்கள். 1965 திமுகவுக்கு எப்படி மாற்றத்தை தந்ததோ அதேபோல் 2026 பாஜகவுக்கு மாற்றத்தை அளிக்கும் என்றார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-முன்னோடி கொள்கைக்கு ஆதரவாக பாஜக தொண்டர்கள் தலைநகர் முதல் கிராமங்கள் வரை ஒவ்வொரு பூத் வரை சென்று கையெழுத்து பெறுவார்கள். மே மாதத்திற்குள் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் வழங்குவோம்.
மேலும் மும்மொழிகொள்கைக்கு ஆதரவாக திருச்சி, நெல்லை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். தேசிய கல்விக் கொள்கை என்பது அடிப்படை விஷயமாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்போது அது நடக்கும் நாடாளுமன்ற தொகுதி மறு வரையறையில் விகிதாச்சார அடிப்படையில் உயர்த்தப்படும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெளிவாக சொல்லியுள்ளார்.அவர் இருக்கும் போது அனைத்து கட்சி கூட்டம் நடத்துவதற்கான அவசியம் என்ன?இந்த விவகாரத்தில் தென்னிந்திய மாநிலங்களை இணைத்து போராட்டக் குழுவை உருவாக்குவோம் என்று முதல் அமைச்சர் பேசுகிறார்.
அவர் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறார். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து மறைமுகமாக யாரிடமும் பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. கூட்டணியில் எந்த கட்சிகள் இருக்கும் என்பது குறித்து நேரமும் காலமும் வரும்போது பேசுவோம். தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடுவருமான விஜய் தொகுதி மறுவரையறை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். எம்பிக்கள் பொம்மையாக இருப்பதாக கூறுகிறார். அவருக்கு எம்பி பதவி என்றால் என்ன என்பது குறித்து யாராவது சொல்ல வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.