Kathir News
Begin typing your search above and press return to search.

உங்க டிவி டிபேட்டுக்கு நான்தான் கிடைத்தேனா?கள நிலவரம் அரசியல் விமர்சகர்களுக்கு எப்படி தெரியும்? அண்ணாமலை அதிரடி!

உங்க டிவி டிபேட்டுக்கு நான்தான் கிடைத்தேனா?கள நிலவரம் அரசியல் விமர்சகர்களுக்கு எப்படி தெரியும்? அண்ணாமலை அதிரடி!
X

SushmithaBy : Sushmitha

  |  8 March 2025 6:19 PM

நேற்று மார்ச் 7 கோவையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காக தவம் கிடக்கிறார்கள் என கூறியிருந்தார் அண்ணாமலை இந்த கருத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் பத்திரிகையாளர்கள் கேட்ட பொழுது அவர் அதிமுகவை பற்றி எங்கே அண்ணாமலை குறிப்பிட்டார் தவறாக பேசாதீர்கள் என பதில் அளித்திருந்தார்

இந்த நிலையில் மார்ச் 8 இன்று எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பதில் குறித்து கோவை விமான நிலையத்தில் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடம் டிவியில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடக்கும் விவாதங்களுக்கு அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் எந்த கட்சியையும் சாராத இரண்டு பேர வைத்துக்கொண்டு திரித்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள்

நீங்கள் விவாதம் நடத்துவதற்கு நான் தான் கிடைத்தேனா நேற்று நான் பேசியதில் அதிமுகவை எங்குமே குறிப்பிடவில்லை பாஜகவின் நிலையை மட்டுமே குறிப்பிட்டேன் விவாத நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை ஆனால் விவாத நிகழ்ச்சியில் அமர் பவர்களுக்கு களத்தில் நடப்பது என்ன என்பது எப்படி தெரியும் அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் பாஜகவை திட்டுவதையே வேலையாக வைத்துள்ளனர்

அவர்கள் நடுநிலையாக பேசுகிறார்களா அவர்களுக்கு திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் அதற்கு ஏற்ற வகையில் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்கின்றனர் என சரமாரியான பதில் மற்றும் கேள்விகளை முன்வைத்தார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News