ஹிந்தி திணிப்பு என்ற கற்பனையை மாற்றுங்கள்: அண்ணாமலை கொடுத்த பதில்!

ஹிந்தி திணிப்பு கற்பனையின் பெயரில் அட்டைக்கத்தி வீசுவது நிறுத்துங்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் ஹிந்தி பேச தெரியாதவர்களின் மூச்சு திறன் அடிக்கும் அளவுக்கு ஹிந்தி திணிக்கப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் குற்றம் சாட்டு இருந்தார்.
அதற்கு அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும் போது, மும்மொழி கொள்கை ஆதரவாக எங்களது ஆன்லைன் கையெழுத்து இயக்கத்திற்கு 36 மணி நேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது கருத்துக்களை தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர் என்பதை முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் கள கையெழுத்து இயக்கப் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் இருந்த போதிலும் நீங்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு கையெழுத்து பிரச்சாரத்தை கூட நடத்த முடியவில்லை. உங்கள் கட்சியின் துண்டு பிரசுரங்களை குப்பைத் தொட்டியில் வீசினார்கள் மக்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஹிந்தி திணிப்பு என்பது தங்களின் கற்பனையை உங்கள் போலி ஹிந்தி திணிப்பு நாடகம் அம்பலம் ஆகிவிட்டது, அதை தாங்கள் இன்னும் உணராது இருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஹிந்தி திணிப்பு கற்பனை என்ற அட்டகத்தி வீசுவது முதலில் நிறுத்துங்கள், இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.