மூன்று நாட்களாக அமலாக்கத்துறையின் அதிரடி சோதனை:சிக்கிய முக்கிய புள்ளிகள்!

அமலாக்கத்துறை கடந்த வியாழன் அன்று டாஸ்மாக் மதுபான முறைகேடு புகார் தொடர்பாக பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது தமிழகம் முழுவதும் பல இடங்களில் குறிப்பாக டாஸ்மாக் மதுபான கொள்முதல் விற்பனை மதுக்கூடம் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் முறைகேடு நடந்ததாக இருந்த புகாரின் அடிப்படையில் மூன்று நாட்களாக சோதனைகளை மேற்கொண்டு கடந்த ஞாயிறு அன்று சோதனையை முடித்தது
அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டதில் சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் திமுக எம்பி ஜெகதீஷனுக்கு சொந்தமான மதுபான நிறுவனம் உட்பட எட்டு முக்கிய இடங்களிலும் தொடர் சோதனைகள் நடைபெற்றுள்ளது இந்த சோதனைகளில் பல முக்கியமான ஆவணங்கள் கணக்கில் வராத 50 லட்சம் ரூபாய் ஏராளமான டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பாக முறைகேடு புகாரில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னதாக தமிழகத்தில் அமைச்சரான செந்தில் பாலாஜி இடம் தான் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை உள்ளது இந்த துறையின் கட்டுப்பாட்டில் தான் மது ஆலைகளில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள 4,830 சில்லரை மது கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது
முக்கியமாக பெரும்பாலான மது ஆலைகள் திமுகவின் முக்கிய புள்ளிகளும் அவர்களுக்கு வேண்டியவர்களுமே நடத்தி வருவதாக கூறப்படுகிறது