Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக ஆட்சியாளர்களின் கை பொம்மைகளா அரசு அதிகாரிகள்? பா.ம.க தலைவர் கேள்வி?

தமிழக ஆட்சியாளர்களின் கை பொம்மைகளா அரசு அதிகாரிகள்? பா.ம.க தலைவர் கேள்வி?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 March 2025 10:42 PM IST

பாமக தலைவர் அன்புமணி அறிக்கையில் கூறும் போது, இளங்கோவன் என்ற அதிகாரி சேலம் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார், இவர் ஐஏஎஸ் அதிகாரி அல்ல.தற்போது நகர்புற உள்ளாட்சிகளில் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக முறைகேடுகளின் களமாக மாறி வருகிறது.

தமிழக அரசு மற்றும் ஆட்சியாளர்களின் விருப்பங்களை எதிர் கேள்வி கேட்காமல் நிறைவேற்றுபவர்களை அவர்கள் அதிகாரிகளாக நியமிக்கின்றனர் இது விதிமீறல் மற்றும் கண்டிக்கத்தக்கது.சேலத்தைப் போலவே மிக முக்கியமான மாநகராட்சிகளில் பலவற்றில் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் கமிஷனர்களாக மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அல்லாத அதிகாரிகளாக சமீப காலமாக நியமிக்கப்படுகின்றனர். ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஆக இருந்த ஸ்ரீகாந்த் தற்பொழுது ஜனவரியிலிருந்து ஈரோடு மாநகராட்சி கமிஷனர் ஆக மாற்றப்பட்டார்.அதன்பின் அவர் மயிலாடுதுறை கலெக்டராக நியமிக்கப்பட்டார்.


இது தவிர ஈரோடு மாநகராட்சி கமிஷனர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அல்லாதவர்களை நியமிக்க தமிழக அரசு முயற்சி எடுப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் தமிழக அரசின் சுயநலம் இருப்பதாக நம்பப்படுகிறது. இளங்கோவன் நியமனத்தில் தமிழக அரசு காட்டிய வேகமும், விதிமீறலும் இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட மாட்டார்கள், அதனால் ஐஏஎஸ் அல்லாத அதிகாரிகளை தமிழக அரசு நியமிக்க ஆர்வம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுகிறது.

தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சியில், 13 மட்டுமே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கமிஷனர்களாக உள்ளனர். சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவனை உடனடியாக ரத்து செய்து. இளம் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். முறைகேடுகளுக்கு ஒத்துழைக்கும் அதிகாரிகளுக்கு செல்வாக்குள்ள பதவிகளை வழங்குவதை தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு அவர்களின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News