தமிழக முதல்வரிடம் அண்ணாமலை மூன்று கேள்விகள்: என்ன கேட்டார் தெரியுமா?

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் தேவை என்று முதல்வர் ஸ்டாலின் கண்டித்துள்ள நிலையில் அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 3 எதிர் கேள்விகளை எழுப்பி உள்ளார் .திமுகவினர் நேர்மையற்றவர்கள், நாகரிகமற்றவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதில் எந்த தவறும் இல்லை, அவர் கூறியதில் என்ன குறை கண்டீர்கள்?
மக்களின் எண்ணங்களுக்கு மட்டும் மதிப்பளித்து செயல்படும் தாங்கள் யார் அந்த மக்கள் என்பதை கூற வேண்டும். உங்கள் மகன், மகள், மருமகன் மற்றும் தனியார் பள்ளிகளை நடத்தும் உங்கள் கட்சியினர அல்லது அவரது உறவினர்களா ? யார் அந்த சூப்பர் முதல்வர் ? ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.
இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள் அது நிச்சயம் நிறைவேறும் காலம் இறங்கி விட்டது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.