தொகுதி மறு சீரமைப்பு நடந்தால் தமிழகம் அதிக இடங்களை தான் பெரும்:நம்பிக்கை தெரிவித்த ராஜ்நாத் சிங்!

2026 ஆம் ஆண்டு மக்கள் தொகையின் கணக்கெடுப்பின்படி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தானது லோக்சபா தொகுதி எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார் மேலும் இது குறித்து மற்ற மாநிலத்தின் முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார்
இதுகுறித்து தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த பேச்சுவார்த்தையில் நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்திருந்தார் இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொகுதி மறு சீரமைப்பு தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் அதிக இடங்களை தான் வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்
மேலும் தமிழக முதல்வருக்கு ஏதேனும் இதில் மாற்று கருத்துக்கள் இருந்தால் அவர் அதனை சுதந்திரமாக கூறலாம் அவரின் கருத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசித்து இறுதியில் நீதித்துறை இதில் முடிவை எடுக்கும் தமிழகம் ஆந்திரா கர்நாடகா மற்றும் கேரளா இந்த செயல்முறையின் மூலம் அதிகரிப்பை காணும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் வட இந்தியா மட்டுமே பயனடையும் என கூறுவது நியாயமானது அல்ல என தெரிவித்துள்ளார்