தி.மு.கவின் போலி நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்: பா.ஜ.க தலைவர் அண்ணாமலை!

By : Bharathi Latha
திமுகவின் நாடகத்தை இனியும் மக்கள் நம்ப மாட்டார்கள். 1960களில் இது போன்ற கதை நடக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக தமிழக முழுவதும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெரும் இயக்கத்தை பாஜக தொடங்கி வைத்துள்ளது. கையெழுத்து இயக்கத்திற்கு மக்களிடம் ஆதரவு கிடைத்துள்ளதாக கட்சி தலைவர்கள் கூறுகின்றனர். இதை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
இது தொடர்பான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறும் போது,தமிழக மக்கள் முழுமையாக புரிந்து கொண்டு மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்திற்கு பெருமளவில் ஆதரித்து வருகின்றனர். திமுகவின் பொய்யான நாடகத்தை நம்பி இனி மக்கள் ஏமாற தயாராக இல்லை. யாரோ எழுதிக் கொடுப்பதை பேசிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கண்ணைத் திறந்து உலகத்தை பார்க்க வேண்டும்.
இனி உங்கள் போலி நாடகத்தை மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள். 1960 அல்ல தற்போது உள்ள புதுயுகம் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான சமமான கல்வி கிடைப்பதனை இனியும் உங்களால் தடுக்க முடியாது இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
