உங்கள் மகன் எத்தனை மொழி கற்றுக்கொடுக்கும் பள்ளியில் படிக்கிறார் பி.டி.ஆர் அவர்களே!பிரஸ்மீட்டில் அண்ணாமலை சரவெடி கேள்வி!

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முழுமையாக தோல்வியடைந்த மும்மொழிக் கொள்கை மாடலை தமிழகத்தின் திணிக்க பாஜக முயற்சிக்கிறது வெற்றியடைந்த நமது மாடலை எடுத்துவிட்டு தோல்வி அடைந்த மாடலை பின்பற்ற சொன்னால் என்ன அர்த்தம் அறிவுள்ளவர்கள் யாரேனும் இதனை ஏற்றுக்கொள்வார்களா என்று அறிவுள்ளவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஆதரிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்
இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மும்மொழிக் கொள்கை அவசியமா அவர்கள் அறிவுள்ளவர்களாக என அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேட்டுள்ளார் அவரிடம் நானே திருப்பி கேட்கிறேன் உங்கள் மகன் இந்திய குடிமகனா அல்லது அமெரிக்க குடிமகனா இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு உங்கள் மகன் எந்த பள்ளியில் படிக்கிறார் உங்கள் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக் கடிய பள்ளியில் படிக்கிறார் என்றால் உங்களுக்கு அறிவில்லை என்று தானே அர்த்தம் என பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் கருத்திற்கு மாற்றுப் பதிலடி கொடுத்துள்ளார்
அதுமட்டுமின்றி தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக அமைச்சர்களின் குழந்தைகள் பேரக் குழந்தைகள் மும்மொழியில் தான் படிக்கிறார்கள் இவர்களில் யாரேனும் என் குழந்தை இரண்டு மொழி தான் படிக்கிறார்கள் என தைரியமாக பேசுகிறார்களா யாருமே பேசுவது கிடையாது அவர்களுக்கு ஒரு நியாயம் பொதுமக்களுக்கு ஒரு நியாயமா என்று தெரிவித்துள்ளார்