Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக பட்ஜெட்டில் ₹ பதிலாக இடம்பெற்ற ரூ:சமூக வலைதளங்களில் எழும் விமர்சனங்கள்!

தமிழக பட்ஜெட்டில் ₹ பதிலாக இடம்பெற்ற ரூ:சமூக வலைதளங்களில் எழும் விமர்சனங்கள்!
X

SushmithaBy : Sushmitha

  |  13 March 2025 2:48 PM

2025-2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் நாளை மார்ச் 14 தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தமிழ் எழுத்தான ரூ தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது

அதாவது சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட என்ற வாசகத்துடன் தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் 2025-2026 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை எல்லார்க்கும் எல்லாம் என்ற வாசகத்துடன் பதிவிட்டு இருந்தார் அதிலும் குறிப்பாக இந்திய ரூபாயை குறிப்பதற்கு தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ₹யை தமிழக அரசு பயன்படுத்தாமல் தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் குறித்த அறிவிப்பில் ரூ என்ற தமிழ் எழுத்து இடம் பெற்றுள்ளது

சமீபகாலமாகவே தேசிய கல்விக் கொள்கை பற்றிய மோதல் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிலவி வருகிறது இதனால் தமிழகத்தின் பல இடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் இந்தி வாக்கியங்கள் கூட திமுக கட்சியினரால் அளிக்கப்பட்டது இந்த நிலையில் தமிழக பட்ஜெட்டில் ரூ இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது

₹ குறியீடு தேவநாகரி எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த டி.உதயகுமார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது என்பதும் அவர் வடிவமைத்த இந்த குறியீடு தான் இந்தியா முழுவதும் உலகத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்படுகிறது என்பதும் திமுக வட்டாரம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News