முதல்வர் தன் பெயரை தமிழில் மாற்றிக் கொள்வாரா?தமிழிசை சௌந்தரராஜன் வைத்த செக்!

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மார்ச் 14 இல் நாளை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார் அதற்காக தமிழக அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டை காண பொருளாதார ஆய்வு அறிக்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மார்ச் 13 இல் வெளியிட்டார்
அந்த ஆய்வறிக்கையில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் கடந்த ஆண்டு ரூபாயை குறிக்க பயன்படுத்தப்படும் ₹ குறியீடு இடம் பெற்றிருந்தது ஆனால் இந்த ஆண்டு அதற்கு பதிலாக ரூ என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது இந்த மாற்றத்திற்கு திமுக தரப்பில் தமிழுக்கு முக்கியத்துவமளிக்கும் விதமாக இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது ஆனால் தற்போது இந்தியா முழுவதும் வழக்கத்தில் உள்ள ₹ குறியீட்டை தமிழகத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவர்தான் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழக முதல்வர் தனது பெயரை தமிழில் மாற்றிக் கொள்ளட்டும் தமிழ்நாட்டை எத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளீர்கள் இப்போது ஏன் ரூபாய் குறியீட்டை மாற்றி உள்ளீர்கள் திமுக அரசின் தோல்விகளை மறைக்க அவர்கள் போடும் நாடகம் தொடர்கிறது தேசவிரோத மனநிலையுடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக திமுக எப்போதும் பிரிவினை வாதத்தை பேசி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்