Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழில் கவர்ச்சியான பெயர் வைத்து பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா எதையும் செயல்படுத்த வேண்டாமா!அமைச்சர் எல்.முருகன்!

தமிழில் கவர்ச்சியான பெயர் வைத்து பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா எதையும் செயல்படுத்த வேண்டாமா!அமைச்சர் எல்.முருகன்!
X

SushmithaBy : Sushmitha

  |  14 March 2025 5:47 PM

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இதில் அரசு ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் தரப்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகிற நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெற்று விளம்பரங்களும் ஸ்டிக்கர்களும் நிறைந்த 2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை என தெரிவித்துள்ளார்

மேலும் அவர் அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளதால் 2026ல் முழு அளவிலான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும் வெற்று விளம்பர திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது தான் வழக்கம்போல் வெற்று அறிவிப்புகள் மட்டுமே பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ளன தொழிற்பூங்காக்கள் தொழிற் பயிற்சி நிலையங்கள் தொழிற்பேட்டைகள் என பட்ஜெட்டில் அறிவிப்பு மட்டும் தான் உள்ளது ஆண்டுதோறும் பட்ஜெட்டில் அறிவித்தால் போதுமா திட்டங்களை செயல்படுத்துவது எப்போது

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது முந்தைய அதிமுக அரசு செயல்படுத்தி வந்த இந்த திட்டத்தை 4 ஆண்டுகாலம் முடக்கி வைத்துவிட்டு ஆட்சி முடியும் நிலையில் மீண்டும் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக கூறுவது புதிய இளம் வாக்காளர்களை கவர்வதற்கான கேலிக்கூத்தே தவிர இதனை வேறு எப்படி எடுத்துக் கொள்ள முடியும்

மாநில சுயாட்சி பற்றி வாய்கிழிய பேசி வரும் திமுகவினர் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் இன்னும் பரவலாக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஏன் பேச மறுக்கின்றனர் தமிழில் கவர்ச்சியான பெயர் வைத்து பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா எதையும் செயல்படுத்த வேண்டாமா

இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்தீர்கள் அது இன்னமும் வெற்று அறிவிப்பாக இருக்கிறது திட்டங்களுக்கு பெயர் சூட்டுவதில் வித்தகர்களான திமுகவினர் அதனை செயல்படுத்துவதில் எத்தர்கள்.கடந்த 4 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை அதில் ஒன்று இரண்டாவது செயல்படுகிறதா என்பதை விளக்க வேண்டும்

இதுவரை தமிழகத்தில் பொறுப்பில் இருந்த அனைத்து அரசுகளின் பங்களிப்பும் உள்ளது ஆனால் இந்த ஸ்டிக்கர் ஒட்டும் திருட்டு திராவிட மாடல் அரசு இதற்கு எப்படி பெருமைப்பட முடியும் திமுக அரசு பதவியேற்ற 4 ஆண்டுகளில் செய்த சாதனை என்ன இந்த நான்கு ஆண்டுகளில் இந்த சாதனை பட்டியல் வந்து விட்டதா இதற்கு முன்பு பல ஆண்டுகள் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி செய்தபோதும் இதே சாதனைப் புள்ளிகள் இருந்ததே என அறிக்கை வெளியிட்டுள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News