காமராஜர் பெயரில் பள்ளிகள் துவங்கப்படும்: அண்ணாமலை கொடுத்த வாக்குறுதி!

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2500 வழங்கப்படும். மாவட்டம் தோறும் நவோதயா பள்ளிகள் காமராஜர் பெயரில் துவங்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.தென்காசியில் புளியங்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டதில் அண்ணாமலை பேசும் போது,தென்காசியில் பாஜக வளர்ச்சி துவங்கியுள்ளது. 5 சட்டசபை தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும். தென்காசி மாவட்டம் சுதந்திரப் போராட்ட வீரர்களை கொண்ட பெருமைக்குரியது.
பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைகின்றனர்.குடும்பங்களை பாதுகாக்க 2026 இல் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும். தமிழகத்தில் திமுக ஆட்சி மக்களின் நிம்மதியை உருகுலைத்து விட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இடையே நிம்மதி இல்லை. தமிழகத்திலும் எங்கும் எதிலும் லஞ்சம் வாங்கும் பழக்கம் பெருகி வருகிறது. தகுதியற்றவர்கள் தொடர்ந்து பதவியில் இருக்கின்றனர்.
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை திமுக எதிர்க்கிறது. ஆனால் திமுக தலைவர்களின் குழந்தைகள் மற்றும் நிர்வாகிகளின் வாரிசுகள் மூன்று மொழிக் கல்வி முறையில் படித்து வருகின்றனர். கல்வி கற்றவர்கள் மட்டுமே நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல. ஆனால் தற்பொழுது தமிழகத்தில் ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி வருவது அதிகரித்து வருகிறது. கல்வி மற்றும் மருத்துவத் துறையில் உயர்ந்த தரத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். புளியங்குடி எலுமிச்சை பழத்திற்கு புவிசார் குறியீடு ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும். இதன் மூலம் ஏற்றுமதி அதிகரித்து விவசாயிகள் பயன்பெறுவர். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 உரிமை தொகை வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகள், கர்மவீரர் காமராஜர் பெயரில் துவங்கப்படும் இவ்வாறு அண்ணாமலை பேசினார்.