Kathir News
Begin typing your search above and press return to search.

சொல்வது ஒன்று செய்வது ஒன்றா! ₹ குறியீடு வேண்டாம்,ஆனால் அகரம் மொழிகள் அருங்காட்சியகம் திட்டமா?

சொல்வது ஒன்று செய்வது ஒன்றா! ₹ குறியீடு வேண்டாம்,ஆனால் அகரம் மொழிகள் அருங்காட்சியகம் திட்டமா?
X

SushmithaBy : Sushmitha

  |  15 March 2025 4:32 PM

தமிழக அரசு பட்ஜெட்டில் தமிழுக்கும் மற்ற மொழிகளுக்கும் உள்ள தொடர்பு பற்றிய அருங்காட்சியகம் அமைப்பதாக அறிவித்துள்ளது

அதாவது பட்ஜெட் அறிவிப்பதற்கு முந்தைய நாள் ஒரு தமிழனால் உருவாக்கப்பட்டு கொண்டு இந்தியாவும் ஏற்றுக்கொண்ட ₹ குறியீட்டை ஏற்க மறுத்து ரூ என்ற குறியீட்டை ரூபாய்க்கு மாறாக திமுக அரசு பயன்படுத்திவிட்டு பட்ஜெட் நாளில் தமிழுக்கும் மற்றும் மொழிகளுக்கும் உள்ள தொடர்பு பற்றி அருங்காட்சியகம் அமைப்பதாக அறிவித்திருப்பது தற்போது விமர்சனத்தை எழுப்பி உள்ளது

இந்த அருங்காட்சியகம் தென்னிந்திய பழங்குடி சமூகங்களால் பேசப்படும் மொழிகளையும் ஆவணப்படுத்த உள்ளது மொழிக் கொள்கை மற்றும் கல்வி நிதி தொடர்பாக மத்திய அரசிற்கும் தமிழக அரசிற்கும் உரசல் அதிகம் ஆகிக்கொண்டே செல்கிறது தமிழை நாங்கள் வளர்ப்போம் தமிழை மட்டுமே வளர்ப்போம் என கூறிக்கொண்டு ₹ குறியீட்டையும் மறுத்த இந்த திமுக அரசு தமிழுக்கும் மற்றும் மொழிகளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்வுள்ளது தமிழ் ஆர்வலர்கள் இடையே வினோத போக்கு என்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது

ஏனென்றால் ஒரு மொழி வளர வேண்டும் என்றால் மற்ற மொழி கலாச்சாரம் பண்பாட்டில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் மேலும் மற்றும் மொழிகளை கற்றுக் கொண்டால் மட்டுமே அந்த மொழிகளுக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்பு நமக்கு புலப்படும் ஆனால் இங்கு மூன்றாவதாக ஒரு மொழியை ஏற்றுக்கொள்ளவே திமுக தயாராக இல்லை பேசுவது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News