மேக் இன் இந்தியா திட்டம் தோல்வியடையவில்லை - நிர்மலா சீதாராமனின் பதிலடி!
மேக் இன் இந்தியா திட்டம் தோல்வியடையவில்லை என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மாநிலங்களவையில் நேற்று நடந்த மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்கட்சி உறுப்பினர்கள் மேக் இன் இந்தியா திட்டம் தோல்வியடைந்து விட்டதாக குற்றம் சாட்டி பேசினார். இதற்கு பதில் அளித்து நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டங்கள் நல்ல பலன்களைத் தந்துள்ளன. அவை இதுவரை 1.5 லட்சம் கோடி முதலீடுகளை எடுத்துள்ளன. 9.5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. மேக் இன் இந்தியா திட்டம் உண்மையில் நல்ல பலன்களை தந்துள்ளது. இந்த நாட்டின் உற்பத்தியை வலுப்படுத்த நாங்கள் படிப்படியாக நடவடிக்கை எடுத்தோம். இந்தியாவில் தயாரிப்பதை நம்புங்கள்.
'மேக் இன் இந்தியா' தோல்வி அடையவில்லை. மத்திய பட்ஜெட்டில் பயனுள்ள மூலதனச் செலவு 15.48 லட்சம் ரூபாய் கோடியாக உள்ளது. சமூகத்துறை திட்டங்களுக்கான நிதியும் 60,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பீஹாரில் தயாரிக்கப்படும் ஷூக்கள் ரஷ்ய இராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது. உலக பாதுகாப்பு சந்தையில் இந்திய தயாரிப்புகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.