Kathir News
Begin typing your search above and press return to search.

பொய் சொல்லி உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ள சாராய அமைச்சர்,பதவியிலிருந்து நீக்க வேண்டும்:அண்ணாமலை வலியுறுத்தல்!

பொய் சொல்லி உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ள சாராய அமைச்சர்,பதவியிலிருந்து நீக்க வேண்டும்:அண்ணாமலை வலியுறுத்தல்!
X

SushmithaBy : Sushmitha

  |  24 March 2025 4:29 PM

இன்று திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கில் உச்ச நீதிமன்றம் 10 நாட்கள் தான் காலக்கெடு நிர்ணயித்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்

அதாவது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த சாராய அமைச்சர் சிறையில் ஜாமீன் கிடைப்பதற்காக,அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து நாடகமாடி ஜாமீனில் வெளிவந்ததும் உடனடியாக அமைச்சர் பதவியேற்றதை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் கண்டித்ததோடு அதற்கு விளக்கம் கொடுக்குமாறும் சாராய அமைச்சருக்கு உத்தரவிட்டிருந்தது

ஆனால்,கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும்,சாராய அமைச்சர் இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை,இன்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது

முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது,இதே சாராய அமைச்சர் மீது கூறிய குற்றச்சாட்டுக்களை வசதியாக மறந்து,வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்

ஜாமீன் கிடைப்பதற்காகப் பொய் சொல்லி உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ள சாராய அமைச்சர்,அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை உடனடியாக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News