அரசியல் நோக்கங்களுக்காக மொழி சர்ச்சையை ஏற்படுத்துபவர்களால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியாது:யோகி ஆதித்யநாத்!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த பொழுது உத்திர பிரதேச பள்ளிகளில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகள் கற்பிக்கப்படுவதாகவும் இதனால் உத்திரபிரதேசத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் சிலர் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மொழி சர்ச்சையை உருவாக்குகின்றனர் அவர்களால் தங்களின் அரசியல் நோக்கங்களை அடைய முடியும் ஆனால் மாநிலத்தில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் தான் பாதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்
முன்னதாக கடந்த வாரத்தில் ஒரு செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியிலும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தங்களுடைய வாக்கு வங்கி பாதிக்கப்பட்டுள்ளதாக நம்புவதால் திமுக தலைவர் பிராந்தியம் மற்றும் மொழிகளின் அடிப்படையில் பிரிவினையை உருவாக்க விரும்புகிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்
தமிழகத்தில் திமுக அரசு தொடர்ந்து மொழி சார்ந்த சர்ச்சைகளில் எழுப்பு வருகிற நிலையில் மும்மொழி கொள்கையை தங்கள் மாநிலங்களில் ஏற்று இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் அந்த கொள்கையின் மூலம் பலனையும் பெற்று வரும் மாநிலங்கள் தங்கள் சான்றுகளை முன்வைத்து வருகிறது