பிரதமர் மோடி மக்களின் நலனுக்காகவே திட்டங்களை அமல்படுத்துகிறார்:வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்த விவாதத்தில் ஜே.பி.நட்டா!

லோக்சபாவில் எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா ஏப்ரல் 2 இல் நிறைவேற்றப்பட்டது இதனை அடுத்து இன்று ஏப்ரல் 3 ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது
அப்பொழுது எழுந்து விவாதத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஜே பி நட்டா 25 மாநில வக்பு வாரியங்களுடன் கலந்து ஆலோசித்தோம் நாட்டின் நலனிற்காகவே வகுப்பு வாரிய சட்டத்திருத்தம் முதல் கொண்டுவரப்பட்டது அதுமட்டுமின்றி பார்லிமென்ட் கூட்டு குழுவினர் நாட்டின் 25 முக்கிய நகரங்களுக்கு சென்று வக்பு வாரிய திருத்த மசோதா குறித்த கருத்துக்களையும் பெற்றுள்ளனர்
இருப்பினும் இந்த மசோதா மீதான விவாதத்திலிருந்து எதிர்க்கட்சிகள் திசை திருப்பவை முயற்சி செய்து வருகிறது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வக்பு சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்ட பொழுது அமைக்கப்பட்ட கூட்டுக் குழுவில் 13 பேர் மட்டுமே இருந்தனர் தற்பொழுது 31 பேர் உள்ளனர்
ஒரு திட்டம் அமல்படுத்தப்படும் பொழுது அதில் மக்களின் நலன் இருக்கிறதா என்பதை பார்ப்பதையும் மக்களின் நலனுக்கு தான் முன்னுரிமை கொடுப்பதையும் பிரதமர் மோடி செய்து வருகிறார் கடந்த 70 ஆண்டுகளாக தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்களை சேர்க்காமல் வைத்திருந்தது யார் முஸ்லிம் பெயர்கள் முத்தாலக் முறையை நிறுத்த பிரதமர் மோடிகாக காத்திருந்தனர் பல நாடுகள் இந்த முறையை நிறுத்திவிட்டது, இந்தோனேசியா கூட சில ஆண்டுகளுக்கு முன்பு வக்பு வாரியத்தை சீரமைத்தது ஏன் சவுதி அரேபியா உள்ளிட்ட முஸ்லீம் நாடுகளும் வக்பு வாரியத்தை சீரமைத்துள்ளது இதனால் இந்தியாவும் ஏன் சீரமைக்க கூடாது வக்பு வாரியங்கள் முறையாக நிர்வகிக்கப்பட கூடாதா என பேசியுள்ளார்