புளியங்குடி எலுமிச்சைக்கு கிடைத்த புவிசார் குறியீடு!சொல்லி அடித்த அண்ணாமலை!

தென்காசி புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது இதற்கு அண்ணாமலை நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்
முன்னதாக தென்காசியில் சமீபத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புளியங்குடி எலுமிச்சைக்கான புவிசார் குறியீடு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் வருகின்ற ஏப்ரல் முதல் வாரத்திற்குள் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அப்பகுதி மக்களிடையே உறுதியளித்து பேசி இருந்தார்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதுபடியே ஏப்ரல் முதல் வாரத்திலே புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீட்டிற்கான கோரிக்கையை பரிசளித்து வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் புவிசார் குறியீட்டை வழங்கியுள்ளார் இதனைக் குறிப்பிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தனது சமூக வலைதள பக்கத்தில் அமைச்சர் பியூஸ் கோயலிற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்