மாநில தலைவர் போட்டியில் நான் இல்லை;வம்பே எனக்கு வேண்டாம்:அண்ணாமலை!

ஏப்ரல் 4 கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என கூறியுள்ளார்
அதாவது நாடாளுமன்றத்தில் பப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது இதனை தமிழக பாஜக வரவேற்கிறது இந்த சட்டம் ஏழை இஸ்லாமியர்களுக்கு ஒரு வரத பிரசாதம் என வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா குறித்து முழுமையாக எடுத்துரைத்தார் இதனை தொடர்ந்து பாஜகவின் புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நீங்கள் இருக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை அண்ணாமலை டெல்லி சென்றார் அண்ணாமலை அவரை கை காட்டினார் என்ற எந்த வம்பு சண்டைக்கு நான் வரவில்லை நான் போட்டியில் இல்லை என்று தெளிவாக கூறியுள்ளார்
முன்னதாக தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற ஒரு பேச்சு இருந்து வருகிற நிலையில் அண்ணாமலை மாநில தலைவர் போட்டியில் நான் இல்லை என்று கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் ஒரு தெளிவை ஏற்படுத்தியுள்ளது