தமிழகத்திலிருந்து எனக்கு எழுதும் கடிதத்தில் ஆங்கில கையெழுத்துகளே உள்ளது!தமிழ் கையெழுத்துகளில் எழுதுங்கள்:பிரதமர் மோடி!

தாய்லாந்து இலங்கை பயணம் முடித்து தமிழகம் வந்த பிரதமர் ராமேஸ்வரத்தில் 8,300 கோடி ரூபாய் மதிப்பில் பல ரயில் மற்றும் சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மேலும் ராமேஸ்வரம் புதிய தூக்கு பாம்பன் பாலத்தையும் திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் தனது உரையை தமிழில் வணக்கம் என்று கூறி தொடங்கிய பிரதமர் புதிய ரயில் திட்டங்களால் ரயில்வே துறை நவீனமாக்கப்பட்டுள்ளது
நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் ஒன்றிணைந்தால் நாடு வளர்ச்சி வலிமை பெறும் எனக் கூறியுள்ளார் நாட்டின் ஒட்டுமொத்த திறனும் வெளிவந்து கொண்டிருக்கிறது நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்திற்கு பெரும் பங்கு உள்ளது தமிழகத்திற்கு மூன்று மடங்கு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார்
மேலும் தமிழக அரசு அதிக நிதிகளை கொடுத்தும் கூட சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள் அவர்களால் அது மட்டும் தான் செய்ய முடியும், இளைஞர்கள் மருத்துவ படிப்பிற்கு அயல் நாட்டிற்கு செல்ல வேண்டிய நிலை இருக்கக்கூடாது தமிழில் மருத்துவ படிப்பை வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் அதுதான் எங்கள் விருப்பம்
உலகெங்கும் தமிழ் மொழியை கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது தமிழில் பாரம்பரியம் உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்றடைந்துள்ளது ஆனால் தமிழகத்திலிருந்து தனக்கு கடிதம் எழுதுபவர்களின் கையெழுத்து ஆங்கிலத்திலேயே உள்ளது எனக்கு எழுதும் கடிதங்களில் தமிழில் கையெழுத்திடுங்கள் தலைவர்களின் கையெழுத்தாவது தமிழில் இருக்கக் கூடாதா என்று கேள்வியை முன் வைத்துள்ளார்