Kathir News
Begin typing your search above and press return to search.

கருணாநிதி நினைவிட அலங்காரம்: இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா?

கருணாநிதி நினைவிட அலங்காரம்: இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 April 2025 7:07 PM IST

மறைந்த கருணாநிதி கல்லறையின் மீது புனித தன்மை வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தை பயன்படுத்துவது தமிழகத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் ராஜேந்திரன் இதற்கு தன்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.


இது பற்றி அவர் கூறும் பொழுது, மறைந்த கருணாநிதி அவர்களின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிபுத்தூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் திமுக அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது."பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி" என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா?

சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா?அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் சேகர் பாபு அவர்கள் இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.மேலும், அந்த பிரச்சினைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் இந்த ஒரு செயல் குறித்து பாஜக காரிய கருத்தா அண்ணாமலை அவர்களும் தன்னுடைய கண்டன பதிவை பதிவு செய்து இருக்கிறார். குறிப்பாக இந்து மதத்தை புண்படுத்தும் இத்தகைய செயல்களை தொடர்ச்சியான வண்ணம் திமுக செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News