Kathir News
Begin typing your search above and press return to search.

பள்ளி மாணவர்களிடையே தலை தூக்கும் வன்முறை கலாச்சாரம்: வேடிக்கை பார்க்கிறதா தி.மு.க அரசு?

பள்ளி மாணவர்களிடையே தலை தூக்கும் வன்முறை கலாச்சாரம்: வேடிக்கை பார்க்கிறதா தி.மு.க அரசு?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 April 2025 7:11 PM IST

தமிழகத்தில் சக மாணவனை அருவாளால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாஜக காரிய கர்த்தாவான அண்ணாமலை அவர்கள் தன்னுடைய மிகுந்த அதிர்ச்சி கலந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் அறிக்கையில் கூறும் பொழுது, திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை தனியார் பள்ளி ஒன்றில், எட்டாம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.




தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களிடையே இது போன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வியடைந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு. தவறான மனிதர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு, இத்தனை சிறு வயதிலேயே அரிவாளைக் கையில் எடுக்கும் அளவுக்கு, நமது குழந்தைகள் மனதில் வன்முறை எண்ணம் தலைதூக்கியிருக்கிறது என்றால், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், அரசு என அனைவருமே இதற்கு பொறுப்பு.


பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றத்தாரையே முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு வளர்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், கடுமையான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் மீது கூட நடவடிக்கை எடுக்க அனுமதிக்காமல், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது திமுக அரசு. மேலும், உச்ச வரம்பு வைத்து அரசே மது விற்பனை செய்வதாலும், பெருகிவரும் போதைப்பொருள் புழக்கத்தாலும், தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனால் மாணவ சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்விளைவுகளை முதலமைச்சர் திரு @mkstalin இனியாவது உணர வேண்டும்.

பள்ளி ஆசிரியர்களால் தங்கள் பணிச்சுமைகளைக் கடந்து, அத்தனை குழந்தைகளையும் கண்காணிப்பது என்பது இயலாதது. எனவே, பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எப்போதும் தங்கள் கண்காணிப்பில் வைத்திருப்பது சமூகத்திற்கே நல்லது. சரியான வழியில் வளர்க்கப்படும் ஒவ்வொரு குழந்தையும், எதிர்காலத்தில் நூறு குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கிறார்கள். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைத் தங்கள் கண்காணிப்பில் வளர்ப்பது, சமூகத்திற்குச் செய்யும் முக்கியமான கடமை என்பதை உணர்வது நன்று. மேலும் தமிழக அரசு இந்த ஒரு சம்பவத்தை கருத்தில் கொண்டு வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாத வகையில் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News