உச்ச நீதிமன்றம் வைத்த கெடு:பதவியை இழந்த செந்தில் பாலாஜி!

By : Sushmitha
அரசு போக்குவரத்துக் கழகத்தின் அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த பொழுது வேலை வாங்கி தருவதாக பணமோசலில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சில மாதங்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி ஜாமினில் வெளிவந்தவுடனே அமைச்சர் பதவியில் அமர்ந்தார் தமிழக அரசின் இந்த அதிரடி முடிவிற்கு சுப்ரீம் கோர்ட்டும் கடுமையான கண்டனத்தை விடுத்தது மேலும் அவருக்கு ஜாமின் முக்கியமா அமைச்சர் பதவி முக்கியமா என கடந்த விசாரணையின் பொழுது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர் அதுமட்டுமின்றி வருகின்ற 28ஆம் தேதிக்குள் அமைச்சர் பதவியை அவரே ராஜினாமா செய்யவில்லை என்றால் செந்தில் பாலாஜிக்கு பிறப்பிக்கப்பட்ட பிணை ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது
இவரைத் தொடர்ந்து திமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சர் பொன்முடி பெண்கள் பற்றியும் இந்து மதத்தின் பற்றியும் அருவருப்பான கருத்துக்களை முன்வைத்ததால் பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகளை பெற்றார் மேலும் எதிர்க்கட்சிகள் தரப்பிலும் கடும் விமர்சனங்களை பெற்றார் அதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடிக்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தது
அதோடு அவர் மீது தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கும் பரிந்துரை செய்தார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இவரைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரின் வழக்குகள் மீண்டும் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது
இப்படி தொடர்ச்சியாக திமுக அமைச்சர்கள் பிரச்சினைகளில் சிக்கி உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை கண்டனங்களை பெற்று வருகிற நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியின் பதவிகளை தமிழக அரசு பறித்துள்ளது செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கிடப்பட்டுள்ளது மேலும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கு ஒதுக்கிடப்பட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி வகித்து வந்த வனம் மற்றும் காகித துறை பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதோடு அமைச்சரவையில் மனோ தங்கராஜிற்கு மீண்டும் இடம் அளிக்கப்பட்டுள்ளது
