Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக மக்கள் தி.மு.கவை விரைவில் வழி அனுப்புவார்கள்: ஸ்டாலின் பேச்சுக்கு இபிஎஸ் பதில்!

தமிழக மக்கள் தி.மு.கவை விரைவில் வழி அனுப்புவார்கள்: ஸ்டாலின் பேச்சுக்கு இபிஎஸ் பதில்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 April 2025 10:08 PM IST

நேற்று அதிமுக இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இளைஞர் அணியை சேர்ந்த நபர்களுக்கு கூலிங் மதுபானத்துடன் அசைவு விருந்து வழங்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.அதில் அவர் கூறும் பொழுது, "கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி! பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி! போதைப் பொருள் கடத்தலுக்கு தி.மு.க., அயலக அணியே சாட்சி!

போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் தி.மு.க., இளைஞரணி கூட்டமே சாட்சி! ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி! Already ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே Failure. இதில் இன்று Version 2.0 Loading ஆம்!


அ.தி.மு.க., ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழகத்தை, ஜாமினில் வந்த வர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதல்வரே சாட்சி! 2026-ல் ஒரே version தான். அது அ.தி.மு.க., version தான்! மக்கள் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு பை பை ஸ்டாலின் என்று சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி" என்று இ.பி.எஸ்.கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News