பா.ஜ.க- த.வெ.க கூட்டணி சேருமா? நச்சுன்னு பதிலை போட்டு உடைத்த தமிழக பா.ஜ.க தலைவர்!

தமிழக பாஜக தலைவர் அவர்களிடம் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று எழுதியிருந்தார் அந்த பேட்டியின் போது செய்தியாளர் ஒருவர் பாஜக மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி சேருமா இது பற்றி உங்கள் கருத்து என்ன என்பது தொடர்பான கேள்வி ஒன்று எழுப்பி இருந்தார் ஆனால் இதற்கு கச்சிதமாக பதில் அளிக்கும் வகையில் "பாஜக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி குறித்து எதுவும் எனக்குத் தெரியாது'' என நிருபர்கள் கேள்விக்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார். நயினார் நாகேந்திரன்.
காஞ்சிபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில், நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தி.மு.க., ஆட்சி விரைவில் அகற்றப்படும். தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. தேர்தல் பணியை அவர்கள் வேண்டுமானாலும் ஆரம்பித்து இருக்கலாம்.
ஆட்சிக்கு வருவதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து எதுவும் எனக்குத் தெரியாது. நேற்று தான் பிரதமர் மோடி, அமித்ஷாவை பார்த்தேன், கூட்டணி தொடர்பான முடிவுகளை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும் என கூறினார்.