ஆபரேசன் சிந்தூரின் வெற்றியை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் திரங்கா யாத்திரை:பாஜக தலைமை அதிரடி திட்டம்!

By : Sushmitha
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பிறகு ஆபரேஷன் சிந்தூர் என்பதை தொடங்கிய இந்தியா அதில் வெற்றியைக் கண்டு தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த முடிவை எடுத்து உள்ளது
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றதாக டெல்லியில் இன்று மே 12 பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் கட்சியின் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் பெற்ற சாதனைகளை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கும்,நாடு முழுவதும் பரப்பப்படுகின்ற தவறான தகவல்களை எதிர்ப்பதற்கும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது
அதன்படி மே 13ஆம் தேதி முதல் மே 23ஆம் தேதி வரை திரங்கா யாத்திரை நடத்த பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இந்த யாத்திரை நாடு முழுவதும் பத்து நாட்களுக்கு நடக்க உள்ளதாகவும் இதில் மத்திய அமைச்சர்கள் எம்பிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அனைத்து மட்டங்களிலும் உள்ள கட்சியை நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது
அதோடு இந்த யாத்திரையில் இந்திய ஆயுதப்படைகளின் துணிச்சலையும் நாட்டை பாதுகாப்பதில் மத்திய அரசு எடுத்த அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் மக்களுக்கு தெளிவாக அடிக்கோடிட்டு காட்டும் வகையில் பிரச்சாரங்கள் இருக்கும் என கூறப்படுகிறது
