ஆபரேஷன் சிந்தூர் வெற்றிப்பேரணி.. அண்ணாமலையை விடாமல் சூழ்ந்து கொண்ட தொண்டர்கள்!

By : Bharathi Latha
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்பதை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறது. இதற்கு இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் திரங்கா யாத்திரை அதாவது தேசியக்கொடி யாத்திரை என்பது நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பாஜக சார்பில் இந்த தேசிய கொடி யாத்திரை ஆனது பெரிய அளவில் போற்றக்கூடியதாக அமைந்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஓசூர் மாவட்டத்தில் இந்த யாத்திரை நடத்தப்பட்டது.
போரில் நமக்காக போராடிய வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தேசியக் கொடி யாத்திரை ஓசூர் ராம் நகரில் நடைபெற்றது. இதற்காக தமிழக பாஜக சார்பில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் மற்றும் அண்ணாமலை, ஆயிரக்கணக்கான பா.ஜ.க தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக கொட்டும் மழையிலும் தங்களுடைய யாத்திரையை தொடர்ச்சியான வண்ணம் நடத்தி இருக்கிறார்கள்.
