Kathir News
Begin typing your search above and press return to search.

தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் தொடர்பு: உலக நாடுகளுக்கு செல்லும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு!

தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் தொடர்பு: உலக நாடுகளுக்கு செல்லும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 May 2025 10:14 PM IST

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கூட்டுத் தீர்மானத்தை பிரதிபலிக்கும் வகையில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஏழு குழுவினர் விரைவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து முக்கிய நாடுகளுக்குச் சென்று எடுத்துரைக்கவுள்ளனர். இந்தக் குழுவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் விவரம் பின்வருமாறு:

முதல் குழு: பா.ஜ.க எம்.பி பைஜெயந்த் பாண்டாவின் குழுவில் பாஜகவை சேர்ந்த எம்பி-க்களான நிஷிகாந்த் துபே, பன்னான் கோன்யாக், ரேகா சர்மா, ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுதீன் ஓவைசி, சத்னம் சிங்க சண்டு, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், தூதராக இருக்கும் ஹர்ஷ் ஸ்ரிங்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அல்ஜிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.


இரண்டாவது குழு: பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத் தலைமையிலான குழுவில் பாஜகவின் டகுபதி புரண்டேஸ்வரி, சிவசேனா (உத்தவ் அணி) கட்சியின் பிரியங்கா சதர்வேதி, குலாம் அலி காட்னா, காங்கிரஸின் அமர் சிங், பாஜகவின் சாமிக் பட்டாச்சாரியா, முன்னாள் அமைச்சர் எம்ஜே அக்பர், தூதர் பங்கஜ் சரண் உள்ளிட்டவர்கள் உள்ளனர். இவர்கள் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐநா, இத்தாலி, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

மூன்றாவது குழு: ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்பியான சஞ்சய் குமார் ஷா தலைமையிலான குழுவில் பாஜக எம்பிக்களான அபராஜிதா சாரங்கி, பிரிஜ் லால், பிரதான் பாரு, ஹேமங்க் ஜோஷி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டஸ் காங்கிரஸின் சல்மான் குர்ஷித், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான், தூதர் மோகன் குமார் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இந்தோனேஷியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

நான்காவது குழு: சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவில் பாஜக எம்பிக்களான பன்சுரி ஸ்வராஜ், அதுல் கார்க், மன்னன் குமார் மிஸ்ரா, எஸ்எஸ் அகுல்வாலியா, பிஜேடி கட்சியின் எம்பி சஸ்மித் பாத்ரா, ஐயூஎம்எல் கட்சியின் முகமது பஷீர், தூதர் சுஜான் சினோய் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லிபேரியா, காங்கோ, சியாரா, லியோன் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

ஐந்தாவது குழு: காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் எம்பி தலைமையிலான குழுவில் எல்ஜேபி (ராம்விலாஸ்) கட்சியின் எம்பி ஷாம்பவி, ஜேஎம்எம் கட்சியின் சர்ப்ராஸ் அகமது, தெலுங்கு தேசம் கட்சியின் ஹரிஷ் பாலயோகி, பாஜக எம்பிக்களான ஷஷாங்க்மணி திரிபாதி, தேஜஸ்வி சூர்யா, புவனேஸ்வர் காலிதா, சிவசேனா கட்சியின் மிலின்ட் முர்ளி தியோரா, தூதர் தரன்ஜித் சிங் சண்டு உள்ளிட்டவர்கள் அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

ஆறாவது குழு: திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழுவில் சமாஜ்வாதி எம்பி ராஜீவ் ராய், தேசிய மாநாட்டு கட்சி எம்பி மியான் அல்தாப் அகமது, பாஜக எம்பி பிரிஜேஷ் சோவ்டா, ஆர்ஜேடி கட்சியின் பிரேம் சந்த் குப்தா, ஆம்ஆத்மியின் அசோக் குமார் மிட்டல், தூதர்கள் மங்சீவ் எஸ் புரி, ஜாவேத் அஷ்ரப் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் ஸ்பெயின் கிரீஷ், ஸ்லோவேனியா, லாட்வியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

ஏழாவது குழு: தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சூலே தலைமையிலான குழுவில் பாஜக எம்பி ராஜீவ் பிரதாப் ரூடி, அனுராக் சிங் தாகூர், முரளீதரன், ஆம்ஆத்மி கட்சியின் விக்ரம்ஜித் சிங் சகானி, காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா, தெலுங்கு தேசம் கட்சியின் லாவு ஸ்ரீகிருஷ்ணா தேவராயலு, தூதர் சையத்அக்பருதீன், உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் எகிப்து, கத்தார், எத்தியோப்பியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிக்க உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News