Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க அரசு இந்த விசயத்திலாவது நடவடிக்கை எடுக்குமா? இ.பி.எஸ் ஆவேச கேள்வி?

தி.மு.க அரசு இந்த விசயத்திலாவது நடவடிக்கை எடுக்குமா? இ.பி.எஸ் ஆவேச கேள்வி?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 May 2025 10:47 PM IST

தி.மு.க. குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் சார்கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவருடைய அறிக்கையில் கூறும் போது, "ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக 'சார்'களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த வழக்கில் எப்.ஐ.ஆர்., பதிய அலைக்கழித்த தமிழக அரசின் காவல்துறை, அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ரவியிடம் மாணவி முறையிட்ட பிறகே FIR பதிந்துள்ளது.

மேலும், தன்னைப் போன்றே '20 வயதுள்ள 20 பெண்கள்' தெய்வச்செயலின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். 'பொள்ளாச்சி பொள்ளாச்சி' என்று மேடைதோறும் கூவிய முதல்வரே, 'உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி' தானே? பொள்ளாச்சி வழக்கிற்கும் இந்த வழக்கிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? பொள்ளாச்சி வழக்கை நான் நேர்மையாக CBIக்கு மாற்றினேன்.


நீங்களோ, அரக்கோணம் வழக்கை நீர்த்துப் போக எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருக்கிறீர்கள். பாதிக்கப்பட்ட பெண் தெளிவாக 'உங்கள் நண்பர் பெற்றெடுத்த பிள்ளை' அமைச்சர் மகேஷ் உள்ளிட்ட தி.மு.க.,வினர் பெயரைச் சொல்லி, தான் மிரட்டப்படுவதாக சொல்கிறார்.

தி.மு.க. குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் சார்கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும். 20 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் துடிக்கும் தி.மு.க., நிர்வாகிகள் மீது இந்த 'டம்மி அப்பா' அரசு நடவடிக்கை எடுக்குமா? எடுக்காவிடில், மக்கள் துணையோடு நிச்சயம் அ.தி.மு.க., மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்" என இ.பி.எஸ். கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News