தோல்வியே காணாத பெரும்பிடுகு முத்தையாருக்கு அஞ்சல் தலை வெளியிடு:மத்திய அமைச்சர் எல்.முருகன்!

By : Sushmitha
பாஜக சார்பில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் எல்.முருகன் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பெரும்பிடுகு முத்தையாரின் 1,350 வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் முருகன் பாஜக தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களை போற்றும் கட்சியாக உள்ளது கடந்த 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் பொழுதே இந்தியாவில் மறைக்கப்பட்ட அனைத்து தலைவர்களை பெருமைப்படுத்தும் வகையில் அவர்களின் வரலாற்றை ஆவண படுத்துவது அவர்களின் புகழ் மற்றும் நாட்டிற்கு ஆற்றிய சேவையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து செய்து வருகிறார்
அந்த வகையில் விரைவில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அமரும் அப்பொழுது பெரும்பிடுகு முத்தையாருக்கு எந்த இடத்தில் மணி மண்டபம் கட்டினால் பெருமை சேர்க்குமோ அந்த இடத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் அதோடு அடுத்த ஆண்டு மத்திய அரசின் சார்பில் இதே இடத்தில் பெரும்பிடுகு முத்தையாருக்கு தபால் தலை வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்
