பெட்டி பெட்டியாக இறக்கினாலும் ஆட்சி மாற்றம் உறுதி:நயினார் நாகேந்திரன்!

By : Sushmitha
மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்காக மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது அந்த வகையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் சபரிமலைக்கு செல்லும் தீவிர பக்தராக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இருக்கிறார் ஆனால் அவர் இருக்கும் இடம் சரியானதாக இல்லை அதன் காரணமாகவே முருக பக்தர்கள் மாநாட்டை சங்கீகள் மாநாடு என விமர்சனம் செய்கிறார் என தெரிவித்துள்ளார்
மேலும் இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பெட்டி பெட்டியாக கொடுத்தாலும் திமுக வெற்றி பெற முடியாது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி பாமக எங்கள் கூட்டணியில் தொடரும் என தெரிவித்துள்ளார்
