யார் அந்த சார்'களை பற்றி ஆதாரம்: வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை. இருந்தாலும் இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும்’ என்று தலைப்பில் வீடியோ பதிவு ஒன்றில் அண்ணாமலை விரிவாக கூறி உள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறும் போது, டிசம்பர் 24-ந்தேதி குற்றம் செய்தபிறகு அடுத்த நாள் ஞானசேகரன் என்ன செய்கிறான்? CDR-ஐ பொறுத்தவரைக்கும் பழக்க வழக்கம் எப்படி இருக்கு?
அந்த பகுதி 170-வது வட்ட செயலாளர் ஒரு முக்கியமான தி.மு.க.-வின் மூத்த தலைவர் கோட்டூர் சண்முகம். இவரும் ஞானசேகரனும் டிச.24-ந்தேதி காலையில் இருந்து மாலை வரை 6 முறை பேசுகிறார்கள். அன்று காலை 7.27-க்கு முதல் போன்கால் தொடங்குது. மாலை 4.01 -வரை 5 முறை பேசுகிறார்கள். அதன்பிறகு தான் 4-5 மணிநேரம் பேசலை. அந்த நேரத்தில் ஞானசேகரனை காவல்நிலையத்தில் வைத்திருக்கணும். வெளியே வந்த பிறகு ஞானசேகரனும் கோட்டூர் சண்முகமும் மறுபடியும் பேசுகிறார்கள். எதுக்கு கோட்டூர்புரம் போலீசார் 24-ந்தேதி ஞானசேகரன் காவல்நிலையத்தில் இருந்து வெளியே விட்டீர்கள்? ஆதாரங்களை அழிக்கவா? செல்போன் பதிவு மற்றும் வீடியோக்களை அழிக்கவா? இல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் உபயோகத்தில் இருந்த கேமராக்களை கழட்டி வீசவா? எதற்காக 24-ந்தேதி கைது செய்யப்பட்ட ஞானசேகரனை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருந்து வெளியே விடப்பட்டார்?
இந்த நேரத்தில் முக்கியமான விஷயம், ஞானசேகரன் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்தபிறகு இரவு 8.30 மணிக்கு மேல அமைச்சர் மா.சுப்பிரமணியனும், கோட்டூர் சண்முகமும் பேசுகிறார்கள். மறுபடியும் 8.32 மணிக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியனும், கோட்டூர் சண்முகமும் பேசுகிறார்கள். இதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். எதற்காக? யாரை காப்பாற்றுவதற்காக இவ்வளவு பதட்டம்?
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியக்கூடிய நடராஜன் என்ற முக்கியமான அதிகாரி. அவரிடம் கேட் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை எல்லாம் காவல்துறை தான் சொல்லணும். இது என்னுடைய வேலை கிடையாது. 48 மணிநேரம் கழித்து அந்த நடராஜன் யார் என்பது குறித்து பேசுவோம். அவர் PRO- வா? கேட் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.