ஷா என்ற பெயரை கேட்டாலே தி.மு.க-வுக்கு பயம் தான்: கிண்டல் செய்த பா.ஜ.க மாநில தலைவர்!

பா.ம.க உட்கட்சி பிரச்னையில் பாஜக சமரசம் செய்யவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரையில் செய்தியாளர்களுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன உரையாடினார். அப்பொழுது அவர் கூறும் பொழுது, மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று இரவு மதுரை வருகிறார். நாளை காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு, மாலையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார். அவர், பா.ம.க., தலைவர் அன்புமணியை சந்திப்பது குறித்து இதுவரை திட்டம் எதுவும் இல்லை. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி வர வேண்டும் என்பதற்காக கூட்டம் நடக்கிறது.
அமித் ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும், தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் முதல்வர் ஸ்டாலின். அந்த 'ஷா' தான் மஹாராஷ்டிராவில் ஆட்சியை கொண்டு வந்தார். டில்லியிலும் கொண்டு வந்தார். தி.மு.க.,வுக்கு ஷா என்றால் எப்போதும் பயம் உண்டு. 1976ல் தி.மு.க., ஆட்சியை கலைத்தது கே.கே.ஷா என்ற கவர்னர் தான். அன்று முதல், ஷா என்ற பெயரை கேட்டாலே தி.மு.க.,வுக்கு பயம் தான்.