Kathir News
Begin typing your search above and press return to search.

பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்!

பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Jun 2025 12:28 PM IST

சென்னையில் படிக்கும் 13 வயசு சிறுமிக்கு நேர்ந்த பாலியல் தாக்குதல் தொடர்பாக பா.ஜ.க சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக அண்ணாமலை இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்த தன்னுடைய சமூக வலைதள பக்கங்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார். குறிப்பாக அவர் கூறும் பொழுது, "சென்னையில், அரசு சேவை இல்லத்தில் தங்கிப் படிக்கும் 13 வயது மாணவி, விடுதி காவலாளியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்களிடையே அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.


தமிழகம் முழுவதுமே, பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் வழக்குகள், திமுக அரசால் பொறுப்பின்றி கையாளப்படுவதன் விளைவு, சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் சிறிதும் பயமில்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு குற்றம் நடைபெற்ற பிறகும், குற்றவாளியைப் பிடித்து விட்டோம் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் திமுக அரசு, குற்றம் நடக்காமல் தடுப்பதுதான் அரசின் முதல் கடமை என்பதை மறந்து போய்விட்டது. உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள மாணவியர் விடுதிகளில், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News