Kathir News
Begin typing your search above and press return to search.

கோவில் பட வடிவேலு காமெடி போன்று திமுக மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது:அண்ணாமலை!

கோவில் பட வடிவேலு காமெடி போன்று திமுக மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது:அண்ணாமலை!
X

SushmithaBy : Sushmitha

  |  14 Jun 2025 8:40 PM IST

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வீடு வழங்கும் திட்டம் பிரதமர் மீன்வளத் திட்டம் உயிர்நீர் எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்

படையப்பா படக் காமெடி போல மாப்பிள்ளை அவர்தான் ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது எனச் சேலம் அரசுவிழாவில் பேசியிருந்தேன் பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு மாண்புமிகு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும் என ஆங்கில நாளிதழை குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்

இதற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இந்தியா முழுவதும் மொத்தம் 54 மத்திய அரசு உதவியில் செயல்படும் திட்டங்களும் 260 மத்திய அரசின் பல்வேறு துறைகளின் நேரடி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் வரிப்பகிர்வு மானியங்கள் உதவித் தொகை திட்டங்களுக்கான பங்கீடு நெடுஞ்சாலைகள் விமான நிலையங்கள் துறைமுகங்கள் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத் துறைத் திட்டங்கள் என ரூ5,47,280 கோடி நிதி மத்திய அரசு வழங்கியுள்ளது

உண்மை இப்படி இருக்க முரசொலியை திமுகவினரே படிப்பதில்லை என்பதற்காக ஆங்கில முரசொலியில் தங்கள் வசதிக்கேற்ற கதைகளை எழுதச் சொல்லி அதைக் கொண்டு வந்தால் மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் அவர்கள் கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவையை போல மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம், இது போன்ற நாச்சியப்பன் கடையில் திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது என பதில் அளித்துள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News