அனுபவம் இருந்தாலும்,மூத்தவரானாலும் மாணவனாக இருக்க வேண்டும்,சில நேரங்களில் அமைதியே நல்லது:அமித் ஷா அட்வைஸ்!

By : Sushmitha
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பாஜகவினருக்கான பயிற்சி முகாமில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தவறுகள் நிகழலாம் ஆனால் அது மீண்டும் நிகழக் கூடாது சில சமயங்களில் அமைதியாக இருப்பதுதான் புத்திசாலித்தனம் என அறிவுரை கூறியுள்ளார்
இந்த பயிற்சி முகாமில் பேசிய அமித்ஷா சிந்து நடவடிக்கைக்கு பின் மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என்று கூறியதையும் குறிப்பிட்டு தவறுகள் நடக்கலாம் ஆனால் அவை ஒருபோதும் மீண்டும் நிகழக் கூடாது அவர்கள் எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர்களாகவோ அல்லது மூத்தவர்களாகவோ இருந்தாலும் ஒரு மாணவன் போல இருக்க வேண்டும் என்று கூறி சர்ச்சைக்குரிய கருத்துக்களில் இருந்து விலகி இருப்பது மிகவும் முக்கியமென்றும் சில சமயங்களில் அமைதியாக இருப்பது தான் புத்திசாலித்தனம் எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்
