Kathir News
Begin typing your search above and press return to search.

கொச்சி-கோவை-கரூர் பெட்ரோலியக் குழாய் பதிக்கும் திட்டம்:போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை சந்தித்த அண்ணாமலை!

கொச்சி-கோவை-கரூர் பெட்ரோலியக் குழாய் பதிக்கும் திட்டம்:போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை சந்தித்த அண்ணாமலை!
X

SushmithaBy : Sushmitha

  |  16 Jun 2025 6:33 PM IST

கொச்சி-கோவை-கரூர் பெட்ரோலியக் குழாய் பதிக்கும் திட்டம் விவசாய நிலங்கள் வழியாகச் செல்வதால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள் தமிழக விவசாயிகள் சங்கப் போராட்டக் குழு சார்பில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இன்று அவர்களை நேரில் சந்தித்து அவர்கள் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைத்திட துணையிருப்போம் என்று தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உறுதி அளித்தார் அவருடன் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் சொல்லேருழவன் செல்லமுத்து தமிழக பாஜக விவசாயிகள் அணி மாநிலத் தலைவர் நாகராஜ் திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் KCMB சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்


மேலும் இது தொடர்பாக கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக பாஜக சார்பில் விவசாயிகள் குழுவுடன் மாண்புமிகு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்களை சந்தித்து மாற்று வழி குறித்துப் பரிசீலிக்க கோரிக்கை விடுத்திருந்தோம்


ஏற்கனவே கெயில் நிறுவனத்தின் குழாய்கள் பதிக்கப்பட்டிருப்பதால் தேசிய நெடுஞ்சாலை எண் 544 வழியாக புதிய குழாய்கள் பதிக்க வாய்ப்பு இல்லை என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது தேசிய நெடுஞ்சாலை எண் 81 வழியாக கொண்டு சென்றால் சூலூர் பல்லடம் காங்கேயம் வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் பாதிப்புக்குள்ளாவார்கள் எனவே மாநிலச் சாலைகள் வழியாக கொண்டு செல்ல மாற்று ஏற்பாடுகள் குறித்து முடிவு செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்


மேலும் மிக முக்கியமான இடங்களில் உள்ள தங்கள் விவசாய நிலங்களைக் குழாய்கள் பதிப்பதற்காக கொடுத்த விவசாயிகள் தற்போது அந்த நிலங்களில் இருந்து பெரிய அளவில் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கக் கோரும் கோரிக்கையையும் முன்னெடுத்துச் செல்லவுள்ளோம் என தெரிவித்துள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News