Kathir News
Begin typing your search above and press return to search.

கோவை மாரியம்மன் கோவிலில் சிலை உடைப்பு சம்பவம்: அண்ணாமலை கடுமையான கண்டனம்!

கோவை மாரியம்மன் கோவிலில் சிலை உடைப்பு சம்பவம்: அண்ணாமலை கடுமையான கண்டனம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 Jun 2025 10:55 PM IST

புகழ்பெற்ற மாரியம்மன் கோவிலில் சமூக விரோதிகள் உள் நுழைந்து பழமையான சிலைகளை உடைத்து இருப்பது தொடர்பாக அண்ணாமலை அவர்கள் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கூறும் பொழுது, "புகழ்பெற்ற கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில், நேற்று இரவு, சமூக விரோதிகள் புகுந்து, நூற்றாண்டு கால பழமையான சிலைகளை உடைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.


இந்தப் பகுதி மக்கள் காலங்காலமாய் வணங்கி வரும் அம்மன் ஆலயத்தின் சிலைகளை உடைத்து, சமூகப் பதற்றம் ஏற்படுத்துவதே நோக்கமாகத் தெரிகிறது. உடனடியாக, கோவில் சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என கூறி உள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News