Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ் கடவுள் முருகனை கொண்டாட வேண்டும்: பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சொன்ன சீக்ரெட்!

தமிழ் கடவுள் முருகனை கொண்டாட வேண்டும்: பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சொன்ன சீக்ரெட்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Jun 2025 2:43 PM IST

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் நெடுங்காலமாக, இந்துக்கள் என்றால் கேலி, கிண்டல் செய்யலாம், அவர்களின் கொள்கைகளை, கலாசாரத்தை கீழ்த்தரமாக பேசலாம் என்ற சிந்தனை பரவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதேபோல், தமிழையும், முருகனையும்; தமிழையும், ஆன்மிகத்தையும் பிரிப்பதற்கான ஏற்பாடு, இங்கு நெடுங்காலமாக உள்ளது.


தமிழ் ஆன்மிகத்தை வளர்த்தது, ஆன்மிகம் தமிழை வளர்த்தது. பாம்பன் சுவாமிகள் மட்டும், 6,666 தமிழ் பாடல்களை, முருகன் மீது பாடியுள்ளார். தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக, தமிழகத்திற்கும், ஆன்மிகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற நிலை வலியுறுத்தப்படுகிறது. இது தேர்தல் நேரங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. இனிமேல் தமிழ் கடவுள் முருகனை கொண்டாடுவோர்தான் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை, தமிழகத்தில் உருவாக வேண்டும். இந்துக்களுக்கு வாழ்த்து சொல்ல முடியாதவர்கள், இனிமேல் தமிழக மக்களின் வாழ்த்துக்களை பெற முடியாது என்ற நிலை ஏற்பட வேண்டும்" என கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News